நவம்பர் 16,2025,
தக்கலை:-

தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் S.I.R-ஐ எதிர்த்து மாவட்ட தலைமையகங்களில் இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் தக்கலை மணலி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் பெரும் திரளான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன், மத்திய மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் சபின் ஆகியோர் தலைமையேற்றனர். மாவட்டம் முழுவதிலுமிருந்த கழக உறுப்பினர்கள், இளைஞர் அணி, பெண்கள் அணி உள்ளிட்ட பல பிரிவினரையும் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இதில் பங்கேற்று தங்களது எதிர்ப்பைக் குரலாக எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பங்கேற்பாளர்கள் S.I.R-க்கு எதிரான கோஷங்களை எழுப்பி, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய தீர்மானங்களையும் முன்வைத்தனர்.
கழக தலைவர்கள், “மக்களின் உரிமைகளை பாதிக்கும் எந்த நடவடிக்கைக்கும் எதிராக தமிழகம் முழுவதும் ஜனநாயகப் பாதையில் அமைதியான போராட்டங்கள் தொடரும்” என தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் அமைதியாக நிறைவடைந்தது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன்: ஜெனீருடன் குமரி மாவட்ட தலைமை நிருபர்: பாவலர் ரியாஸ்.
