திண்டுக்கல் : நவம்பர்,05.
திண்டுக்கல் மேற்கு தாசில்தார் அலுவலகத்திற்கு எதிர்ப்புறம் உள்ள JR Browsing இ சேவை மையத்தில் TNEFADGL534-01 தமிழ்நாடு அரசு சேவை பதிவு எண் கொண்ட அலுவலகத்தில் 4.11.2025 சுமார் மாலை 6.00 மணி அளவில் பட்டா பதிவு செய்வதற்காக சென்ற பொழுது பத்திரம் மற்றும் ஈசி வாங்கிப் பார்த்துவிட்டு அப்பத்திரத்தில் உள்ள உட்பிரிவுகளுக்கு ரூ800 வீதம் 19 உட்பிரிகளுக்கு 16 ஆயிரம் ரூபாய் கேட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் மற்றொரு இ.சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டு பேசியபோது ரூ 60 கூறியவுடன் உடனடியாக கடைக்காரர் 20 உட்பிரிவுகளுக்கும் ரூ60 வீதம் ரூ1200 ரூபாயும் பதிவு கட்டணமாக ரூ 50 வீதம் ரூ1000 மொத்தம் ரூ 2200க்கு ரூ 2000 கொடுக்கல் என்று கேட்டார் அப்பொழுது கணினி ஆப்ரேட்டர் செய்யும் அந்த பெண்ணிடம் ஒரு பத்திரப்பதிவிற்கு ரூ60 மற்றும் பதிவு கட்டணம் ரூ 50 சேர்த்து ரூ 110 தான் வருகிறது என்று கூறியதற்கு இல்லை பணம் செலுத்த வேண்டும் என்று கூறி 1200 ரூபாய் மீண்டும் கேட்டனர்.
சுதாரித்துக் கொண்ட கணினி ஆப்ரேட்டர் அந்த பெண் இல்லை சார் இரண்டு முறை பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார் அதற்கு 300 ரூபாய் கொடுங்கள் என்று கூறினார் ஆனால் கடைக்காரர் 400 ரூபாய் கேட்டு அழுத்தம் கொடுத்தார் அவர்களுக்கு 300 ரூபாய் இணையதளம் வழியாக (gpay) மூலம் பணம் செலுத்திய பிறகு பில் கேட்டவுடன் சுதாரித்துக் கொண்ட அந்த கடைக்கார பெண் பதிவே ரத்து செய்துவிட்டு பணத்தை திருப்பி அனுப்பி விட்டார்.
அதே கடையிலேயே மற்றொரு பட்டா பதிவிற்கு ரூபாய் 610 பெறப்பட்டுள்ளது இவ்வாறாக தமிழக அரசால் ஏழை எளிய மக்கள் இ சேவை மையத்தின் மூலமாக பயன் பெரும் வகையில் உருவாக்கப்பட்டு அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை விட பலித்த மட்டும் மக்களை ஏமாற்றி வசூலிக்கின்றனர்.
இதேபோல் இ சேவை மையங்களில் ஏழை எளிய மக்கள் அரசு இயந்திரத்தில் ஆன்லைன் பதிவு செய்யும் முறை கொண்டுவரப்பட்டுள்ளதால் இவர்களைப் போன்ற சில நபர்களால் பெரும்பாரியான பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றன இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விலை நிர்ணயப்பட்டில் வைக்க சொல்லியும் விழிப்புணர்கள் கொடுத்தும் இவ்வாறு நடைபெறுகின்ற தொடர் கொள்ளை இ சேவை மையங்கள் மீது தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட இ சேவை மையத்தின் அவப்பெயரை உருவாக்கும் கடைகளின் மீது உடனடியாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து கடையில் உரிமையை ரத்து செய்யுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர் ?
இதில் ஒரு படி உள்நோக்கி கவனித்து பார்த்தால் கடை அமைந்துள்ள இடம் தினசரி அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் மேற்கு தாசில்தார் அலுவலகம் எதிரில் அமைந்துள்ளது தாசில்தார் அலுவலகத்துக்கு வரும் பெரும் அளவு பொதுமக்கள் அதன் எதிரே அமைந்துள்ள கடையை பயன்படுத்திகின்றனர் ஒருவரிடம் இருந்தே இவ்வளவு தொகை பெறப்படும் இக்கடைக்காரர் நாள்தோறும் எத்தனை பயனாளிகளை ஏமாற்றி இருப்பார். இது பெருமளவு நூதன முறை திருட்டாக ஈடுபட்டுள்ளார் இதில் எத்தனை பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் !
