திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை நடைபெற்று வருவதாக பழனி நகர் காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
.எனவே ஆயக்குடி காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் சார்பு ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.
முன்னதாக ஆயக்குடி பகுதியில் நடைபெற்ற சோதனையில் திண்டுக்கல்லில் இருந்து கேரளா மாநில
கள்ள லாட்டரிகள் ஆயக்குடிக்கும் மற்றும் பழனி பகுதிகளுக்கும் கொண்டுவரப்படுவதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து நடைபெற்ற அடுத்த கட்ட விசாரணையின் அடிப்படையில்
திண்டுக்கல்லை சேர்ந்த சிவக்குமார், பழைய ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் நாச்சிமுத்து ,அடிவாரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய நான்கு நபர்கள் டிக்கெட் லாட்டரி விற்பனை செய்வதாக தெரியவந்ததை அடுத்து அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களிடம் இருந்து 944 கேரளா மாநிலத்தைச் சேர்ந்த கள்ள லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினரால் சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தியாளர் நா.ராஜாமணி