திருநெல்வேலி,நவ.21:-
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா
உத்தரவின்படி, மாநகர காவல் துணை ஆணையர்கள் V.கீதா, G.S.அனிதா (தலைமையிடம்) மற்றும் S.விஜயகுமார் (கிழக்கு) ஆகியோரின் மேற்பார்வையில், திருநெல்வேலி மாநகர எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில், தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில், இன்று திருநெல்வேலி சந்திப்பு காவல் ஆய்வாளர் பொன்ராஜ், சந்திப்பு ம.தி.தா இந்துககல்லூரி மேல்நிலைப் பள்ளியிலும், தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துகணேஷ், தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன், சாந்திநகர், ஸ்ரீ சாய் சத்யா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியிலும், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் இந்திரா, தியாகராஜ நகர், சிருங்கேரி சாரதா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், மாணவ, மாணவிகளிடம், போதைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கிட, உறுதிமொழியினையும் ஏற்க செய்தனர். பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள், கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.