தென்காசி, பிப் 11
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் பொட்டல்புதூர் ஊராட்சி பக்கிரி மூப்பன் குடியிருப்பு
1வது வார்டில் வசிக்கும் பொது மக்கள் மல்கா அலி தலைமையில் சாலை வசதி மற்றும் கழிவு நீர் ஓடை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,:-
நாங்கள் தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் பொட்டல்புதூர் ஊராட்சி பக்கிரி மூப்பன் குடியிருப்பு கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் நாங்கள் சாலை வசதி, கழிவு நீர் ஓடை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். முதலியார்பட்டி பஞ்சாயத்து எல்கைக்கும் பொட்டல்புதூர் பஞ்சாயத்து எல்கைக்கும் சேர்ந்து வருவதால் முதலியார் பட்டி ஊராட்சி மன்ற தலைவரிடமும் பொட்டல்புதூர் ஊராட்சி மன்ற தலைவரிடமும் 10 வருடங்களாக மனு கொடுத்து வருகிறோம்.
கடையம் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை முதலியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பொட்டல்புதூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்குமாறு கூறி வருகின்றனர் பஞ்சாயத்தில் நிதி இல்லை என்றும் கூறி வருவதால் நாங்கள் இந்த மனுவை இரு பஞ்சாயத்து மக்களும் சேர்ந்து கொடுத்துள்ளோம் எனவே தாங்கள் தெரு சாலை வசதியும் கழிவு நீர் ஓடைகளும் அமைத்துத் தருமாறு. கேட்டுக் கொள்வதாக அவர்கள் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
