தென்காசி அடுத்துள்ள வெங்கட்ராம்பட்டி முத்தம்மாள்புரம் ஊர் பாலம் மற்றும் அடிப்படை வசதி கேட்டு பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பிணத்தை வைத்து ஊர்மக்கள் தர்னாவில் ஈடுபட்ட ஊர்பொதுமக்கள்.
இந்த பகுதியில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்கு சரியான பாதை இல்லாததாலும் மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடல்களை தூக்கிச் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு இந்த பகுதி மக்கள் உள்ளதால் பலமுறை அரசு சார்ந்த அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை என்ற சூழ்நிலையில் இன்று இறந்த ஒருவரின் உடலை பாதையில் வைத்து சுமார் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது பின்பு கூட்டம் கலைந்து செல்லப்பட்டது இதனால் இப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.