செப் – 27, உடுமலை –
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அம்மன் கலைக்குழுவினர் சார்பில் கும்மியாட்டம் நடனம் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த ஒருமாத காலமாக அனைத்து தரப்பினரும் வள்ளி கும்மி நடனத்தை கற்றுக்கொள்ளும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை காரத்தொழுவு அழகுநாச்சியம்மன் கோயில் வளாகத்தில் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்டு வள்ளி கும்மி நடனமாடினார். இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
