திண்டுக்கல் மாவட்டம் பழனி இரயிலடி சாலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக உணவு ஊட்டும் விவசாயத்துக்கு உயிரூட்டுவோம் என்ற தலைப்பில் விவசாய பெருமகனார்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
தொடர்ந்து இந்நிகழ்வில் விவசாய தொழில் செய்து வரும் அனைத்து விவசாயிகளையும் பெருமைப்படுத்தும் விதமாக பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி கௌரவப்படுத்தினர்.
மேலும் இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக தமிழக திரைப்படத்துறை நகைச்சுவை நடிகர் தாமு கலந்து கொண்டு விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகள் படும் வேதனைகள் பற்றியும் விவசாயம் செய்யும் வழிமுறைகள் பற்றியும் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறி விவசாயிகளுக்கு பொன்னாடை போர்த்தி பெருமைப்படுத்தினார்.
மேலும் இந்நிகழ்வில் வனிகர் சங்க மாவட்ட தலைவர் ஜே பி சரவணன்
சரவணபொய்கை கந்த விலாஸ் பாஸ்கரன் பிபிஎன் மருத்துவர். விமல் குமார் மற்றும் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளையின் மாநில தலைவர் இரமேஷ் மாரிமுத்து, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ராஜா,
நகர விவசாய அணி செயலாளர் திருமூர்த்தி, மற்றும் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளையின் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு உணவு ஊட்டும் விவசாயத்துக்கு உயிர் ஊட்டுவோம் என்ற விருது வழங்கும் விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றன…
பழனி செய்தியாளர்: நா.ராஜாமணி