நாகர்கோவில்; 06
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வள துறை மற்றும் வருவாய் துறைக்கு உட்பட்ட பொறுப்புகள், சம்பந்தமில்லாத நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மரு. ஸ்டாலின் நேரடியாக செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சட்டப்படி அந்த துறைகள் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகள், நடவடிக்கைகள் குறித்து எந்தவித எதிர்வினையும் காணப்படாத நிலையில், ஒரு உயரதிகாரி துறை எல்லையை மீறி செயல்படுவது குறித்து பல்வேறு தரப்புகள் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றன.
பொது நலனுக்காகவேனும், நிர்வாக ஒழுங்கு மீறப்படக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது.
தமிழக விடியல் குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.
