திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்திற்கு உட்பட்ட ஜம்புளியம்பட்டி ஏழாவது வார்டு பகுதியில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்கள் கொண்ட பழமை வாய்ந்த திருக்கோயில் உள்ளது இந்த திருக்கோயிலின் பாதையையும் இடத்தையும் அப்பகுதியில் உள்ள சில நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்பினை அகற்றி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக சுகாதார வளாகம் கட்டித் தருமாறு அப்பகுதி பொதுமக்கள் இணைந்து கையெழுத்திட்டு கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர் இதில் அப்பகுதி நாட்டாமை வெங்கடாசலபதி பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளர் கருப்புசாமி, மாவட்டச் செயலாளர் கார்த்திகை சாமி,பால்ராஜ்,சதீஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மனு அளித்தனர்.
