இதில் பட்டா நிலங்களில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை அருண் தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்தியா முழுவதும் சிறுபான்மை இன மக்கள் மீது துன்புறுத்தல் இருக்கிறது என்ற தரவுகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாகவும், அவர்களுடைய உரிமைகளை முழுமையாகவும் பெறுகின்றனர்.
மேலும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களை அதிக அளவில் வழங்கி வருகிறார்” எனக் கூறினார்.
குமரி மாவட்ட செய்தியாளர்
பாவலர் ரியாஸ்
