வாணியம்பாடி, ஆக.4-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில்
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலாற்றில் நீராடிய பின்னர் பாசன கால்வாய் மீது அமைக்கப்பட்டு இருந்த நடை பாதை தற்காலிக பாலம் உடைந்து பக்தர்கள் சிலர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து கோயில் நிர்வாகம் சேதம் அடைந்த இடத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு மன் கொட்டி சாலையை சரி செய்தனர்.
நடை பாதை பாலம் உடைந்து பக்தர்கள் கீழே விழும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
