நவபர் 29 : திண்டுக்கல் ஜி டி என் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் மூன்றாவது முறையாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் இரண்டு வாகனங்களில் 10 அமலாக்க துறையினர் அவரது தரணி குழுமம் அலுவலகத்தில் 7 மணி முதல் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தப்பட்டு வருகின்றனர்
திண்டுக்கல் ஜி டி என் சாலையில் தரணி குழுமம் நிறுவனம் செயல்பட்டு அதன் நிறுவனர் ரெத்தினம் இவர் பிரபல தொழிலதிபர் ஆவார் .இவருக்கு ஜிடிஎன் கலைக்கல்லூரி, செல்வி சேம்பர் ,மணல் டெண்டர், ரியல் எஸ்டேட், புஷ்கரம் கல்லூரி, செல்வி ட்ரான்ஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வரும் நிலையில் சென்ற ஆண்டு பண பரிவர்த்தனையில் முறைகேடுகள் செய்ததாக 12.01.23 கைது செய்யப்பட்டு அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இரண்டாவது முறையாக 25.11.23 அன்று அமலாக்கத் துறையினர் மீண்டும் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். தற்பொழுது மூன்றாவது முறையாக 29.11.24 இன்று மதுரையில் இருந்துஇரண்டு கார்களில் 7 பேர் கொண்ட அமலாக்க துறையினர் காலை 7 மணி முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவரது இளைய மகன் வெங்கடேஷ் என்பவர் 17 வார்டு திமுக மாமன்ற உறுப்பினராக உள்ளார் .
சோதனை நடத்தி வந்த பின்பு இவர் பண பரிவர்த்தனையும் மூலமாக அமலாக்க துறையினர் சோதனை நடத்தப்பட்டு வருகின்றனரா? அல்லது மணல் முறைகேட்டில் இரண்டாவது முறை நடத்தப்பட்ட சோதனையில் பின்னணியாக மீண்டும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தப்பட்டு வருகின்றனரா? என்று முழு விவரம் தெரிய வரும்.
திண்டுக்கல் மாவட்ட நிருபர் : பாலசிந்தன்