நாகர்கோவில், நவ.15:
“நேற்று (15/11/2025) தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, எங்கள் திமுக கிழக்கு பகுதி சார்பில் வாழ்த்து போஸ்டர்களை நாகர்கோவில் நகரின் பல பகுதிகளில் ஒட்டியிருந்தோம். அந்த போஸ்டர்களில் மாண்புமிகு முதலமைச்சர், மாவட்டத் தலைவர்கள், இளைஞரணி அமைப்பாளர்கள் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், நேற்று இரவு சில மர்ம நபர்கள் எங்கள் கட்சி நண்பர்கள் ஒட்டிய போஸ்டர்களை கிழித்துவிட்டதாக தகவல் கிடைத்தது.
உடனே நான் மற்றும் சில கட்சி உறுப்பினர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தோம்.
அப்போது, கோட்டார் வாகையடி தெருவைச் சேர்ந்த ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ மாவட்ட இளைஞரணி பொறுப்பில் இருப்பதாக கூறப்படும் டாட்டா ராஜன் மற்றும் அவருடன் வந்த இன்னொருவர் யமஹா வாகனத்தில் வந்து எங்கள் போஸ்டர்களை கிழித்து கொண்டிருந்தது நேரில் தெரிய வந்தது.
நான் அவரிடம், “ஏன் எங்கள் கட்சி போஸ்டர்களை கிழிக்கிறீர்கள்?” என்று கேட்டவுடன், அவர் தகாத வார்த்தைகளால் திட்டினார். அதுமட்டுமல்லாமல், கையில் இருந்த சாவியை காட்டி “உன்னை கொல்லாமல் விட மாட்டேன்” என்று என்னை நோக்கி கொலை மிரட்டலும் விடுத்தார்.
ஒரு பொதுக் கட்சி அமைப்பாளராக நான் அமைதி குலையாமல் நடந்துகொண்டேன்., ஆனால், அரசியல் வேறுபாடு கொண்டதற்காக எங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வமாக ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்து, மேலுமாக என்னை நோக்கி கொலை மிரட்டல் விடுப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தச் சம்பவத்தில் எங்கள் கட்சி போஸ்டரை கிழித்த டாட்டா ராஜன் மீது, மேலும் அவர் எனக்கு விடுத்த கொலை மிரட்டலுக்கு எதிராக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்று திமுக கிழக்கு பகுதி அமைப்பாளர் C.S. அஜித் தெரிவித்துள்ளார்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.
