#பழனி
சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக கட்சியினருக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி பேருந்து நிலையத்தில் பெருநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் த.வெ.கவினர் விசில் சின்னம் வரைந்துள்ளனர்.
அரசு சுவற்றில் சுவர் விளம்பரம் செய்யாதீர் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அறிவிப்பை பொருட்படுத்தாமல் நமது சின்னம் விசில் என்ற முத்திரையை அச்சிட்டு விதிமுறைகளை த.வெ.கவினர் மீறியதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதுசம்பந்தமாக பழனி பெருநகராட்சி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
