Headlines

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற ராகு – கேது பெயர்ச்சி விழா!

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற ராகு – கேது பெயர்ச்சி விழா! பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற ராகு – கேது பெயர்ச்சி விழா!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் ராகு – கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இன்று (நவம்பர் 13) மாலை 5.14 மணிக்கு நடைபெற்ற ராகு – கேது பெயர்ச்சியைத் தொடர்ந்து, கோவில் நவக்கிரக சன்னதியில் ராகு, கேது பகவான்களுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்கள் செய்து, நல்வாழ்வு வேண்டி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *