முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிச.20- ஆம் தேதி நெல்லை வருகை! 57 கோடி ரூபாய் மதிப்பில் 13 ஏக்கரில் 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள, பொருநை அருங்காட்சியம் கட்டிடத்தை, திறந்து வைக்கிறார்! நெல்லையில் பேட்டி அளித்த, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்!
திருநெல்வேலி,நவ.28:- திருநெல்வேலியில், மொத்தம் 56 கோடியே, 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 13 ஏக்கரில், 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த, “பொருநை அருங்காட்சியகம்” கட்டுமான பணிகளை, நகர்ப்புற உள்ளாட்சித் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, இன்று ( நவம்பர். 28) காலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா சுகுமார், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா…
