வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பட்டபகலில் தனியார் பள்ளி காவலாளி நேற்று முன்தினம் காலை குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையுட முஹம்மத் இர்ஃபானின் மனைவி ஹாஜிராவின் தங்கை கணவர் திருப்பத்தூர் சின்னகடை தெரு பகுதியை சேர்ந்த சல்மான் (வயது 40) என்பவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு, பின்னர் பெங்களூர் தப்பியோடி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில்

கொலையாளியை பிடிக்க பெங்களூருக்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர்.
மேலும் போலீசாரின் தீவிர விசாரணையில் முஹம்மத் இர்ஃபானின் மனைவி ஹாஜிராவுக்கும், அவருடைய தங்கை கணவர் சல்மானுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஹாஜிராவை முஹம்மத் இர்ஃபான் வெளிநாட்டுக்கு (துபாய்க்கு) வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அப்போதிலிருந்தே முஹம்மத் இர்ஃபானுக்கும் சல்மானுக்குமிடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் இருக்கும் ஹாஜிரா தனது கணவரிடம் நெருக்கமாக பேசி வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த சல்மான், எனது கள்ள காதலுக்கு இடையூறாக உள்ள முஹம்மத் இர்ஃபாணை தீர்த்துகட்ட முடிவு செய்து வாணியம்பாடிக்கு வந்து, முஹம்மத் இர்ஃபான் தனியார் பள்ளி செக்யூரிட்டி வேலைக்கு செல்லும் போது பின் தொடர்ந்து சென்று வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து பெங்களூருக்கு தப்பி ஓடி உள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷரேயா குப்தா உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து சல்மானை பிடிக்க பெங்களூர் விரைந்து சென்று நேற்று முன்தினம் இரவு அங்கு பதுங்கி இருந்த சல்மானை கைது செய்து நேற்று காலை வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில் தனது மனைவி குப்ராவின் அக்கா ஹாஜிராவுடன் எனக்கு இருந்த கள்ளக்காதலுக்கு மிகவும் இடையூறாக இருந்த முஹம்மத் இர்ஃபானை தட்டிக் கேட்டும், மிரட்டியும் பயனில்லாததால் கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், நகர காவல் ஆய்வாளர் ஆனந்தன் ஆகியோர் கொலையாளி சல்மான் (வயது 35) என்பவரை கைது செய்து நீதமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்த நகர போலீஸாருக்கு பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அப்சர் மர்வான் திருப்பத்தூர் மாவட்டம் நிருபர்.