பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செண்பகராமன்புதூரில் நடைபெற்ற பாரம்பரிய மாட்டுவண்டிப் பந்தயத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. ரா. மகேஷ் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
திமுக மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் அவர், தமிழர்களின் வீர விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இப்போட்டியில் ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர், இதனைப் பொதுமக்கள் திரளாகக் கூடி உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
