தமிழ்நாடு
திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில், மாதாந்திர ஆய்வு கூட்டம் நடத்திய, மாநகர காவல் ஆணையர்!
திருநெல்வேலி,ஜன.13:-திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று ( ஜனவரி.13) மாலையில், மாநகர காவல் ஆணையர் “முனைவர்” நெ.மணிவண்ணன் தலைமையில், நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநகரில் உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் புலன் விசாரணைகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளின் தன்மை குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள்…
பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த ஆறு மாதங்களாக நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காவலப்பட்டி ஊராட்சியின் 2-வது வார்டில் (சிவ சத்தியா வீடு முதல் ராமசாமி கமலம்மாள் வீடு வரையிலான பகுதி) கடந்த ஆறு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. வழக்கமாக பொந்துபுளி கிராமத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் நீர், காவலப்பட்டியில் தேக்கப்பட்டு விநியோகிக்கப்படும். ஆனால், கடந்த சில மாதங்களாக…
2025 டிசம்பர் 12 மற்றும் 13ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44வது(SRMEU) மாநாடு.
2025 டிசம்பர் 12, மற்றும் 13,ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44,வது பொதுக்குழு கூட்டத்தில் முன்மொழிவு பட்ட தீர்மானங்களின் பட்டியல்* 1)அனைத்து பாதுகாப்பு துறை பொதுத்துறை நிறுவனங்கள் ரயில்வே மற்றும் பிற மத்திய அரச நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புதல். 2) ஏழு ராணுவ தளவாட உற்பத்தி மையங்களை தனியார் நிறுவன மையம் ஆக்குவதற்கான உத்தரவை திரும்பப் பெறுதல். 3) ஒப்பந்த ஆட்சேர்ப்பு ரத்து செய்து காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப வேண்டும். 4…
கோவை மாநகர் மாவட்டம், கெம்பட்டி பகுதி, 80-வது வார்டில் கழகத்தின் சார்பில் திராவிடப் பொங்கல் திருவிழா
மக்கள் முதல்வரின் பொற்கால ஆட்சியை கொண்டாடும் வகையில் கோவையில் களைகட்டிய ‘திராவிடப் பொங்கல் விழா’ – விளையாட்டுப் போட்டிகளுடன் ஆரம்பம் . தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தி, “எல்லோருக்கும் எல்லாம்” என்கிற உன்னத நோக்கில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்டம் விளையாட்டு போட்டிகளுடன் களைகட்டியது. கோவை மாநகர் மாவட்டம், கெம்பட்டி பகுதி, 80-வது வார்டில்…
விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பாலியல் குற்றங்கள் தடுப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இன்று (09-01-2026) மாணவர்களிடையே நேர்மறையான எண்ணங்களை உருவாக்கவும், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கினைக் கல்லூரியின் பாலின உளவியல் கண்காணிப்புக் குழு, விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் மற்றும் விழுப்புரம் மாவட்டக் காவல் குற்றப் பிரிவு ஆகிய அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்தன. பாலின உளவியல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் முனைவர் கு. கலைச்செல்வி வரவேற்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், தற்காலச் சூழலில் மாணவர்கள்…
கோவை மாநகர் முன்னாள் மாவட்ட துணை செயலாளர், தளபதி துரை தேவராசன் 32-ஆம் ஆண்டு நினைவு நாள் விழா.
கோவை மாநகர் முன்னாள் மாவட்ட துணை செயலாளர், நடைபெற்ற திரு *திரு,தளபதி துரை தேவராசன் அவர்களின் 32-ஆம் ஆண்டுநினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றன. இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், பாக முகவர்கள், அணிகளின் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர். கோவைமாவட்டசெய்தியாளர் :சம்பத்குமார்.
அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மின்னணுவியல் மற்றும் தொடர்பில் துறை மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உடுமலைப்பேட்டை எஸ்கே ரோபோட்டிக்ஸ் திரு சபரிநாதன் அவர்களால் இந்த Workshop கல்லூரி முதல்வர் திரு ஈ ரமேஷ் மற்றும் இசைக்கு துறை தலைவர் திரு சி நாகராஜன் அவர்கள் இவ்விழாவினை சிறப்பித்தார் Program…
தமிழக முதல்வரின் 2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 3000 வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பழனியில் இந்நிகழ்ச்சி பழனி நகர வார்டு எண் 20 PCMS ரேஷன் கடை எண் 6ல் நடைபெற்றது.இதில் நகர் மன்ற உறுப்பினர் பத்மினி முருகானந்தம் தி.மு.க. வார்டு செயலாளர் கார்த்திகேயன் மற்றும் தி.மு.க. காங்கிரஸ், நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
ஆயக்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அன்புள்ளம் அறக்கட்டளை சார்பாக கை குளோஸ். தலைக்கு குல்லா போன்றவைகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள். வெறும் கையால் குப்பை அழுவதால் கிருமி தொற்று தோல் நோய்கள் சுவாசக் கோளாறுகள் டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் வயிற்று பிரச்சினைகள் மற்றும் குப்பைகள் உள்ள நச்சுப் பொருட்கள் தோளில் பட்டு எரிச்சல் போன்றவைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும். குளிர்காலத்தில் அதிகாலையில் பணியாற்றும் பொழுது குளிர்ந்த காற்று மற்றும் பனியிலிருந்து காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் எதுவும் வராமல் இருப்பதற்கு 50 க்கு மேற்பட்டோர்களுக்கு கை…
அழகு மட்டும் ஆபத்தல்ல, சக்கரையும் கூட ஆபத்து.
சர்க்கரை நச்சுப்பொருளாக மாறி வரும் சூழலில் நாம் தினந்தோறும் உண்ணும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் பொருட்டு அதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவை போல் மேற்கொள்ள இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு மாநில அரசும் முன்வர வேண்டுமென சுகாதார நல ஆர்வலர்களும் சமூக நல ஆர்வலர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் அரசு பள்ளி மதிய உணவு பட்டியலியில் சர்க்கரையின் அளவு குறைத்திருப்பதையும், பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிக்கப்படும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பழனி -நாகராஜ்
