ஆக் 20, நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே ராமன்புதூர் சந்திப்பில் வித்தியாசமான போராட்டம் ஒன்று நடைபெற்றது.
அன்பு தேசம் மக்கள் இயக்கத் தலைவர் மற்றும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இரத்தினமணி, மத்திய அரசுப் பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி தன்னுடைய உடம்பில் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவரின் கோரிக்கையாகும்.
இந்த நிகழ்வால் அந்தப் பகுதியில் ஒருகணம் பரபரப்பு நிலவியது. போலீசார் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
