திருநெல்வேலி,அக்.28:-
தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, திருநெல்வேலி மாநகராட்சியில், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மண்டலங்களிலும் சேர்த்து, மொத்தம் உள்ள 55 வார்டுகளிலும், மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர்.மோனிகா ராணா அறிவுறுத்தலின் படி, இன்று (அக்டோபர். 28) வார்டு சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றன.

அதன்படி, ஆங்காங்கே நடைபெற்ற கூட்ங்களுக்கு, அந்தந்த வார்டுகளின், மாமன்ற உறுப்பினர்கள் தலைமை வகித்தனர்.
திருநெல்வேலி மண்டலம் 25-வது வார்டில், வடக்கு மவுண்ட் ரோட்டில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில்,25-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மேயருமான கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் “வார்டு சிறப்பு கூட்டம்” நடைபெற்றது.
வார்டு மக்களிடமிருந்து தையல் இயந்திரம், இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட, கோரிக்கைகள் அடங்கிய, மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பெறப்பட்ட மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம், மேயர் அறிவுறுத்தினார். திருநெல்வேலி மண்டல உதவி ஆணையாளர் நாராணயன, மாநகராட்சி நிர்வாக அலுவலர் காசி விசுவநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், இந்த கூடடத்தில் கலந்து கொண்டனர்.
இதுபோல மேலப்பாளையம் மண்டலம் 45-வது வார்டுக்கான சிறப்பு கூட்டம், அந்த வார்டுக்கான மாமன்ற உறுப்பினரும், மேலப்பாளையம் மண்டல நலைவருமான சா. கதீஜா இக்லாம் பாசீலா தலைமையில், தண்டன் ஜூம்மா பள்ளியில் வைத்து நடைபெற்றது.
திருநெல்வேலி மண்டல தலைவர் மகேசுவரி, தச்ச நல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு ஆகியோர் தலைமையிலும், தச்சநல்லூர் மணடலம் 1-வது வார்டில், அந்த வார்டின் மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி துணை மேயருமான கே. ஆர். ராஜூ தலைமையிலும், சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றன.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.
