திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மாநில எச்.ஜ.வி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் பழனி அரசு மருத்துவமனை மற்றும் பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி ஆகியவை இணைந்து எச்ஜ.வி.எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றன.

தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி மாணவிகள் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் பற்றிய விபரங்கள் மற்றும் பரவும் விதம் கட்டுப்படுத்தும் விதம் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை பாடல்கள் மூலமாகவும் நடனத்தின் மூலமாகவும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வின் தலைமையாக பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர். உதயகுமார் மற்றும் மாவட்ட மேற்பார்வையாளர் ஜெசிந்தா,மற்றும் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் அறிவழகன் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்து காண்பித்தனர்.