Headlines
நத்தம் அருகே மூங்கில் குளம் உட்பட 21 நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு: தூர்வாரி, நீர் வழித்தடங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

நத்தம் அருகே மூங்கில் குளம் உட்பட 21 நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு: தூர்வாரி, நீர் வழித்தடங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா, குட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நடுமண்டலம் கிராமத்தில் உள்ள மூங்கில் குளம் கடுமையான ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், குட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள சுமார் 21 குளங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, முறையான பராமரிப்பின்றி காணப்படுகின்றன. கரந்தமலையிலிருந்து குளங்களுக்கு வரும் பிரதான நீர் வழித்தடங்கள் மற்றும் வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களால் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து…

Read More
ஆசிய விளையாட்டில் 3 பதக்கங்கள்: பி.டி. உஷாவின் 39 ஆண்டுகால சாதனையைச் சமன் செய்து தடம் பதித்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!

ஆசிய விளையாட்டில் 3 பதக்கங்கள்: பி.டி. உஷாவின் 39 ஆண்டுகால சாதனையைச் சமன் செய்து தடம் பதித்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!

கோவை: வறுமையை வென்று, தடைகளைத் தாண்டி ஆசிய விளையாட்டு மேடையில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ். கோயம்புத்தூரைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்களை வென்று தடம் பதித்துள்ளார்: எளிய பின்னணியில் உருவான நாயகி: 1998 செப்டம்பர் 20 அன்று கோவையில் பிறந்த வித்யாவின் குடும்பப் பின்னணி மிகவும் எளியது. தந்தை ராம்ராஜ் லாரி ஓட்டுநராகவும், தாய் மீனா வீட்டு வேலை செய்தும் குடும்பத்தைக் காப்பாற்றி…

Read More
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு: 6,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபாடு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு: 6,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபாடு.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிகளில் 6,000 போலீஸார் ஈடுபடுத்தப்படுவர் என எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார். குடமுழுக்கையொட்டி அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, விழாவிற்காக அரசின் அனைத்துத் துறைகள் சார்பில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்….

Read More
பழனி அருகே 3 நாட்களாக தொடரும் மின்வெட்டு: அலட்சியம் காட்டும் மின்சார வாரியம் – தவிக்கும் கலிக்கநாயக்கன்பட்டி மக்கள் கொந்தளிப்பு!

பழனி அருகே 3 நாட்களாக தொடரும் மின்வெட்டு: அலட்சியம் காட்டும் மின்சார வாரியம் – தவிக்கும் கலிக்கநாயக்கன்பட்டி மக்கள் கொந்தளிப்பு!

பழனி: செப். 11,பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருவது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் மின்வெட்டு காரணமாக பகல் நேரக் கடும் புழுக்கத்திலும், இரவு நேரக் கொசுக்கடியிலும் தூக்கத்தைத் தொலைத்து மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாகப் பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும்…

Read More
சட்ட விரோத கும்பலின் ‘ஸ்கெட்ச்’... எஸ்பி ஸ்டாலின் மீது பாயும் அவதூறுகள்... சவுக்கு சங்கருக்கு செக் வைக்குமா போலீஸ்?!

சட்ட விரோத கும்பலின் ‘ஸ்கெட்ச்’… எஸ்பி ஸ்டாலின் மீது பாயும் அவதூறுகள்… சவுக்கு சங்கருக்கு செக் வைக்குமா போலீஸ்?!

கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே, அங்கு சட்டவிரோதக் கும்பல்களின் பிடி தளரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, குமரி மாவட்டத்தையே உலுக்கிக் கொண்டிருந்த டாரஸ் லாரி கனிமவளக் கடத்தல் மற்றும் மது மாஃபியாக்களுக்கு எதிராக அவர் எடுத்த ‘அதிரடி’ நடவடிக்கைகள், மாஃபியா கும்பலை அலறவிட்டுள்ளன. இந்த நிலையில், எஸ்பி ஸ்டாலின் மீது பாயும் தொடர் அவதூறுகள் குமரி மாவட்டத்தைக் கொதிக்க வைத்துள்ளன. கனிமவளக் கடத்தலைத் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த மாஃபியா கும்பல், நேரடியாக மோதிப் பார்க்க…

Read More
பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி அழிவின் விளிம்பில்: முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி அழிவின் விளிம்பில்: முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி முறையான பராமரிப்பும், போதிய ஆசிரியர் நியமனமும் இன்றி அழிவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையேயும் முன்னாள் மாணவர்களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர்கள், சிறந்த ஆசிரியர்கள் எனப் பல துறை சாதனையாளர்களை உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பள்ளியில், சில மாதங்களுக்கு முன்பு பணிபுரிந்த ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின்னர், பள்ளிக்கு நிலையான தலைமை ஆசிரியர் இதுவரை நியமிக்கப்படவில்லை. தற்போது பொறுப்புத் தலைமை ஆசிரியரே அனைத்துப் பணிகளையும்…

Read More
பழனியில் விசிக மாநில செயலாளர் தலைமையில் பெரியார் சிலை ஆய்வு..

பழனியில் விசிக மாநில செயலாளர் தலைமையில் பெரியார் சிலை ஆய்வு..

திண்டுக்கல் மாவட்டம் பழனி இரயிலடிச்சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலை கைப்பிடிகள் சேதம் அடைந்த நிலையில் திராவிடர் கழகம் சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் ஜே.பி.சரவணனிடம் உதவி கோரிய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உடன் சென்று சிலையை ஆய்வு செய்தார். உடனடியாக சிலைக்கு மாலை அணிவிக்கும் செல்லும் படியின் கைப்பிடிகள் மற்றும் சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் டைல்ஸ் கற்கள் அமைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக…

Read More
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சரிவு: நீர்நிலைகளை தூர்வார சி.பி.ஐ.எம்.எல் வலியுறுத்தல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சரிவு: நீர்நிலைகளை தூர்வார சி.பி.ஐ.எம்.எல் வலியுறுத்தல்!

தமிழக அரசு ஆவணங்களில் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு பாதாளத்திற்குச் சென்று கடும் நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் நடைபெற்ற இயற்கை வளங்கள் அழிப்பு, கனிம வளக் கொள்ளை, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மற்றும் திட்டமிடப்படாத நகரமயமாக்கல் கொள்கைகளே மாவட்டத்தின் இன்றைய வறட்சி நிலைக்கு முதன்மையான காரணங்கள் என்று இயற்கை சார்ந்த சமூக ஆர்வலர்களின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதுகுறித்து சி.பி.ஐ.எம்.எல் (CPIML)…

Read More
பழனி சண்முக நதி மற்றும் வையாபுரி குளத்தை தூய்மைப்படுத்த ரூ.3.65 கோடி ஒதுக்கீடு: விரைவில் பணிகள் தொடங்கும் – அமைச்சர் விக்னேஷ் தகவல்

பழனி சண்முக நதி மற்றும் வையாபுரி குளத்தை தூய்மைப்படுத்த ரூ.3.65 கோடி ஒதுக்கீடு: விரைவில் பணிகள் தொடங்கும் – அமைச்சர் விக்னேஷ் தகவல்

பழனி சண்முக நதி மற்றும் வையாபுரி குளத்தை சீரமைத்து தூய்மைப்படுத்துவதற்காக மொத்தம் ரூ.3 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்ததும் சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். பழனியில் நடைபெற்ற தனியார் பேக்கரி திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் விக்னேஷ் வருகை தந்தார். முன்னதாக அவர் கட்சி அலுவலகத்திற்குச் சென்றபோது, மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன், நகரச் செயலாளர்…

Read More
சாதிவாரி கணக்கெடுப்பில் குளறுபடிகளைத் தவிர்க்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சாதிவாரி கணக்கெடுப்பில் குளறுபடிகளைத் தவிர்க்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை:சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எந்தவித குளறுபடிகளுக்கும் இடம் தராமல் துல்லியமாக நடத்தப்பட வேண்டும் என்றும், ஓபிசி (OBC) மக்களின் சமூகநீதி உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ​இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:​தற்போது நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் சாதி விவரங்களைப் பதிவு செய்ய முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட பட்டியல் இல்லாமல், நேரடியாக அவர்கள் கூறும்…

Read More