பழனியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில், பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் நவராத்திரி கலை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இன்று ” உடல் ஒரு திருக்கோயில் ” என்ற தலைப்பில் நடிகர் தாமு சிறப்புரையாற்றி பேசினார். தொடர்ந்து நடிகர் தாமு அவர்களுக்கு கல்விச்செம்மல் என்ற விருதை, பழனி புலிப்பாணி ஆசிரமம் சார்பாக, ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவித்தார்கள்……