Headlines

திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ‘மொழிஞாயிறு’ தேவநேய பாவாணரின், 45-வது ஆண்டு ‌நினைவு தினம் அனுசரிப்பு! நெல்லை மாநகர் மையப்பகுதியில், தேவநேய பாவாணருக்கு, வெண்கலசிலை நிறுவ கோரிக்கை!

திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், 'மொழிஞாயிறு' தேவநேய பாவாணரின், 45-வது ஆண்டு ‌நினைவு தினம் அனுசரிப்பு! நெல்லை மாநகர் மையப்பகுதியில், தேவநேய பாவாணருக்கு, வெண்கலசிலை நிறுவ கோரிக்கை!

திருநெல்வேலி,ஜன.15:-
‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும், ஞா.தேவநேய பாவாணர் சிறந்த தமிழ் அறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநரும், பன்மொழி புலவரும் ஆவார். 27 மொழிகளில், பேசவும் எழுதவும் திறன் பெற்ற இவர், மிக-மிக அரிய சிறப்பு மிக்க சொல்லாராய்ச்சி தொடர்பான, நிறைய நூல்களை எழுதியுள்ளார்.

இத்தகைய பெருமை மிக்க, ‘தமிழ் அறிஞர்’ ஆன, ஞா.தேவநேய பாவாணரின் 45-வது வது ஆண்டு நினைவு தினம், இன்று {ஜனவரி. 15} தமிழகமெங்கும் கடைபிடிக்கப்படுகிறது.அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி மாவட்ட ‘தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்’ சார்பாக, பாளையங்கோட்டை மகாராஜாநகரில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, தேவநேய பாவாணரின் திருவுருவ படத்துக்கு, தோழர் கண்மணிமாவீரன் வேளாளர் தலைமையில், மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் தௌ. அப்துல்ஜப்பார், மாவட்ட செயலாளர் முத்து வீரன், நிர்வாகிகள் ஜமால், சாந்திஜாபர், திருக்குமரன், பகுருதீன், பைரோஸ், சி.துரைசாமித்தேவர், முத்துக்குமார், தமிழ்ப் புலிகள் கட்சியின், மாவட்ட செய்தி தொடர்பாளர் கண்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பரமசிவம், விஜயகுமார், சாம் விண்ணரசன், பொன் முருகன், கண்மணி லலிதா, ஆனந்து ராஜ், முருகன், பார்த்திபன் ஆகியோர் உட்பட, பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நெல்லை பாளையங் கோட்டையில் உள்ள, மாவட்ட மைய நூலகத்திற்கு “மொழி ஞாயிறு”
ஞா. தேவநேய பாவாணர் நூலகம் என பெயர் சூட்ட வேண்டும்! தேவநேய பாவாணருக்கு, திருநெல்வேலி மாநகர மைய பகுதியான, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு எதிரே, முழுவுருவ வெண்கல சிலை நிறுவ வேண்டும்!- இந்த இரண்டு தீர்மானங்களும், தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக, அனுப்பி வைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *