மாணவர்களை அச்சுறுத்தும் புகையிலை: காரத்தொழுவு அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் அமைந்துள்ள காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் “புகையிலை ஒரு உயிர் கொல்லி” என்ற தலைப்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளியில் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பள்ளியின் இடைநிலை ஆசிரியர் சையது முகமது குலாம் தஸ்தகீர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்ச்சியில், பொது சுகாதாரம்…
