திருநெல்வேலி மாவட்டம் அம்பை சாலையில், பிரான்ஞ்சேரி அருகே இன்று இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த பலர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து ஏற்பட்டதும் சம்பவ இடத்தில் பரபரப்பு நிலவியது. காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
விபத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தேவையானவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்துகளின் வேகம், சாலையின் நிலை மற்றும் ஓட்டுநர்களின் கவனக்குறைவு உள்ளிட்ட காரணங்கள் குறித்து விசாரணைக்குப் பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும்.

விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தைச் சீரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக நெல்லை மண்டல நிருபர் பாவலர் ரியாஸ்.
