Headlines

பழனியில் போகர் புலிப்பாணி சித்த மருத்துவர்கள் சாதனை. அறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்.

பழனியில் போகர் புலிப்பாணி சித்த மருத்துவர்கள் சாதனை.அறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம். பழனியில் போகர் புலிப்பாணி சித்த மருத்துவர்கள் சாதனை.அறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி போகர் புலிப்பாணி சித்த ஆயுர்வேத மருத்துவ மையத்தில், 53 வயதுடைய ஆணின் சிறுநீரகத்தில் இருந்த கல், அறுவை சிகிச்சை இன்றி இரண்டே நாட்களில் அகற்றப்பட்டது.

முன்னதாக பரமேஸ்வரர் என்பவர் வயிற்று வலியின் காரணமாக புலிப்பாணி மருத்துவ மையத்தை அணுகினார். தொடர்ந்து அவரை பரிசோதித்த சித்த மருத்துவர் பன்னீர்செல்வம் மற்றும் கல்பனா புலிப்பாணி ஆகியோர் அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதை கண்டறிந்தனர்.

எனவே அவருக்கு பாரம்பரிய சித்த வைத்தியத்தின் படி சித்த மருந்துகள் வழங்கப்பட்டது. இந்த மருந்துகளை மருத்துவரின் அறிவுரைப்படி தொடர்ச்சியாக பரமேஸ்வரன் அருந்தி வந்தார்.

இரண்டு நாட்கள் மருந்துகளை உட்கொண்டதின் பயனாக சிறுநீர் வெளியேறும் பாதையின் வழியாக கிட்டத்தட்ட 13 எம் எம் அளவுடைய கல் சிறுநீர் கழிக்கும் போது வெளியேறியது.

தொடர்ந்து இதனைப் பற்றி தெரிவித்த மருத்துவர் பன்னீர்செல்வம் மற்றும் கல்பனா, சித்த மருத்துவத்தின் மூலம் அதிகபட்சமாக புலிப்பாணி ஆசிரமத்தில் இதுவரை பதினாறு எம் எம் வரையிலான கற்கள் அறுவை சிகிச்சை இன்றி வெளியேற்றப்பட்டுள்ளது .

இதனிடையே அந்த கல் வெளியேறும் பொழுது சிறுநீர் வெளியேறும் பாதையில் சிறு புண்கள் மட்டுமே ஏற்படும். அதுவும் விரைவில் மருந்து எடுத்துக் கொள்வதால் சரியாகிவிடும் என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக சித்த மருத்துவத்தை தமிழ்நாட்டு அரசு மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *