பழனி அருகே மானூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது மானூர் ஊராட்சி. இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இப்பள்ளியில் மாணவர்களின் குடிநீர் தேவைக்காக சின்டெக்ஸ் தொட்டி வைக்கப் பட்டுள்ளது. இதில் உள்ள தண்ணீரே மாணவர்களின் குடிநீராகவும், பள்ளி குழந்தைகளுக்கு சமையல் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த செவ்வாய்க்கிழமை மலம் கலந்துள்ளதை சமையல் பணியாளர்கள் முதலில் பார்த்துள்ளனர். இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம்…
