நாகர்கோவில் ராமன்புதூரில் நேற்று (ஜனவரி 15) இரவு தனியார் அறக்கட்டளை சார்பில் 7-ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில், ‘நிமிர்’ குழுவில் இணைந்து பொதுமக்களுக்காகச் சிறப்பாகப் பணியாற்றிய பெண் காவலர்கள் ஜெயந்தி, ஆஷா பிரியா மற்றும் சுமதி அவர்களுக்கு, அவரது சேவையைப் பாராட்டி “சமூக சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.
இந்த விருதினை மருத்துவர் நாகேந்திரன் அவர்கள் வழங்கி கௌரவித்தார். காவல்துறைப் பணியுடன் சமூகப் பங்களிப்பிலும் சிறந்து விளங்கும் பெண் காவலர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
