Headlines

இறச்சக்குளம் பகுதியில் நாளை அம்பேத்கர் சிலை திறப்பு: விழா ஏற்பாடுகளை என்.சுரேஷ்ராஜன் ஆய்வு…

இறச்சக்குளம் பகுதியில் நாளை அம்பேத்கர் சிலை திறப்பு: விழா ஏற்பாடுகளை என்.சுரேஷ்ராஜன் ஆய்வு...

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சக்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலையை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

இதனையொட்டி விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேடை மற்றும் பிற ஏற்பாடுகளை, தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான என்.சுரேஷ்ராஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் வை.தினகரன், தி.மு.க மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் தாமரைபாரதி, பேரூராட்சி செயலாளர் புவியூர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *