கடந்த வருடம் தமிழக முதல்வர் திரு. மு க ஸ்டாலின் அவர்களால் கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72-க்கு உட்பட்ட ஆர்.எஸ். புரம் மாநகராட்சி இருபாலர்பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

சர்வதேச தரத்திலான ஹாக்கிமைதானம் இன்று துணை முதலமைச்சர், திரு, உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறநந்து வைக்கப்பட்டது. மேலும் இந்த மைதானம். எஸ் ஐ எச் இன் சர்வதேசதரசான்றிதழ் பெற்றது. இதனால், இந்தமைதானம் சர்வதேச தரத்துக்கு உட்பட்ட ஹாக்கி விளையாட்டு போட்டிகள் விளையாட தகுதியானதாகும் .
இந்த நிறுவனம் ஒப்பந்ததாரர்கள் ஜே எஸ் அசோசியேட் டெவலப்மெண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால்,விரைவாக பணிகள்முடித்துக் கொடுக்கப்பட்டது.மேலும் துணை முதல்வர் அவர்கள் 152.9 மகோடி முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார்.

31.7 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 10,626 பயனாளிகளுக்கு 136.44 கோடியில் கோடியில் மதிப்பில்உண்டான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், கோவை மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர்திரு. V. செந்தில் பாலாஜி அவர்கள், முன்னிலையில், கோவை மாநகராட்சி மேயர் திருமதி, ரங்கநாயகி ராமச்சந்திரன். அவர்கள் தலைமையில், நடந்தது.
இந்த விழாவில், கோவை மாவட்ட எம்பி திரு கணபதி ராஜ்குமார். ,கோவை ஒருங்கிணைந்த மாவட்ட மூன்று செயலாளர்கள்,ராஜீவ் காந்தி திமுக மாணவரணி, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் திறளாக கலந்து கொண்டனர். இறுதியாக கோவை மாநகராட்சி கமிஷனர் திரு, சிவகுரு பிரபாகரன்(IAS) அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
கோவை மாவட்ட செய்தியாளர் -சம்பத்குமார்
