திருநெல்வேலி,நவ.5:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மாவட்ட திமுக நிர்வாகிகள்,ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆகியோருடன், தொகுதி மேற்பார்வையாளர் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம், இன்று [நவ.5] மூலக்கரைப்பட்டியில்
நடைபெற்றது.
மாவட்ட திமுக செயலாளரும்,தமிழக முனானாள் சபாநாயகருமான ஆவுடையப்பன், தலைமை வகித்தார்.
சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளரும், முன்னாள் அமைச்சருமான என். சுரேஷ் ராஜன் முன்னிலையில் நடைபெற்ற, இந்த கூட்டத்தில், மாவட்டபொருளாளர் எம்.எஸ்.எஸ். ஜார்ஜ் கோசல், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.கே. சித்தீக், மாநில அணி நிர்வாகிகள்”ஆவின்” எம். ஆறுமுகம்,கே. கணேஷ் குமார் ஆதித்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வேலங்குளம் எம். கண்ணன், சாந்தி சுபாஷ், எஸ்.பரமசிவ ஐயப்பன், எம்.ஏ கனகராஜ், நகர திமுக செயலாளர் களக்காடு மணி சூரியன், ஒன்றிய திமுக செயலாளர்கள் நாங்குநேரி மேற்கு.ஆர் எஸ் சுடலை கண்ணு, பாளையங்கோட்டை தெற்கு கே.எஸ் தங்கபாண்டியன், களக்காடு தெற்கு பி.சி. ராஜன்,களக்காடு வடக்கு கே.செல்வ கருணாநிதி, பாளையங்கோட்டை மத்தி “போர்வெல்” கணேசன், பேரூர் செயலாளர்கள் நாங்குநேரி.எம். வானுமாமலை, மூலைக்கரைப்பட்டி எஸ். எஸ்.கே. முருகையா பாண்டியன்,ஏர்வாடி எம். அயூப் கான் உள்ளிட்டோர், கலந்து கொண்டார்கள். இதுபோல, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இதில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் இரா.ஆ.பிரபாகரன், நகர்மன்ற தலைவர் கே.கே.சி.பிரபாகரன், மாவட்ட துணைச்செயலாளர்கள் மா.தமயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.