செப் 5 கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழ கோணம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சுபிசன் நரம்பியல் மருத்துவமனை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு சட்ட பேரவை தலைவர் திரு. அப்பாவு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இத்துடன் கழக நிர்வாகிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
