கன்னியாகுமரி, செப்.25 –
ஓவியம், கலை இலக்கியம் ஆகிய துறைகளில் பல்வேறு படைப்புகளை வழங்கியுள்ள இவர், பல ஆண்டுகளாக தமிழக கலை உலகில் தனித்துவமான பங்களிப்பு செய்து வருகிறார்.
கலைச்சிறப்பை முன்னிறுத்தி சமூகப் பொது நலக் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஓவியங்களும், இலக்கிய படைப்புகளும் இவரின் சிறப்பம்சமாகக் கருதப்படுகின்றன.
தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் கலைமாமணி விருது, கலைஞர்களின் உழைப்பை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.
அந்த வரிசையில் இந்தாண்டு திரு.வே. ஜீவானந்தன் அவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இவ்விருது அறிவிப்பு வெளியாகியவுடன், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கலை இலக்கிய வட்டாரங்கள், கன்னியாகுமரி மாவட்ட மக்களால் பெருமிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட நிருபர் – பாவலர் ரியாஸ்
