நவராத்திரி ஆன மூன்றாம் நாளில் துர்கா தேவியின் அவதாரம் ஆன சந்தரகண்டா தேவியை வணங்குகிறோம்.
தெற்கில் வாராஹிஅம்மனாக வழிபாடு செய்கின்றோம்.வராக மூர்த்தியோட பெண் அவதாரம் என்றும் அன்னை பராசக்தியின் போர்படை தளபாதியாக இருந்து அன்னைக்கு வெற்றி வாங்கித் தந்த வாராஹி அம்மன்.
புராணங்கள் கூறுவதுஅரவி அம்மனை வழிபட்டால் வீரம் வெற்றி பலம் என்று எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். முதலாவது நாளாக சைலபுத்ரி தேவியாக அவதரித்து இரண்டாம் நாளில் பிரம்மச்சாரிணியையாக சிவனை நோக்கி கடுமையான தவத்தை மேற்கொண்டாள்.மூன்றாவது நாளான சந்திர கண்டதேவியாக சிவபெருமானே திருமணம் முடித்துக் கொள்கின்றாள்.
சந்திர கண்டதேவி சிவபெருமானின் திருமணம் செய்த நாளில் சிவபெருமானின் பிறை நிலவை தனது நெற்றியில் சூடிக்கொண்டாள்.

அம்பாளுடைய நெற்றியில் இருக்கக்கூடிய பிறைநிலவு ஞானத்தையும் வெற்றியையும் மன அமைதியையும் தரக்கூடியது.
அம்பாள் வரும்போது எழும் மணியோசை வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை விரட்ட கூடியது.சகுந்தரகண்டா தேவி 10 திரு கரங்களுடன் ஆயுதங்களையும் தாமரை மலரையும் ஏந்தி உள்ளார்கள.
சந்திர கண்டதேவி பக்தர்களை பாதுகாக்கும் தன்மை கொண்டவள்.நவராத்திரிக்கான மூன்றாம் நாள் நிறம் நீளம்,கோலம் மலர் வகை கோலம், மலர் சம்பங்கி,இலை துளசி, நெய்வேத்தியம் சர்க்கரை பொங்கல் ,காராமணி சுண்டல்,பழம் பலாப்பழம்,ராகம் – காம்போதி.நெய்வேத்தியம் இனிப்பு இனிப்பு குங்குமப்பூ கலந்த பால் பாயாசம் மலர் தாமரை அல்லது ரோஜா பழங்கள் உலர் பழங்கள்.
மதுரை மாவட்ட செய்தியாளர் : சின்னத்தம்பி.
