“முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களால் துவக்கப்பட்ட கலைஞர்கள் சங்கமிக்கும் கலைச் சங்கமம் கலை நிகழ்ச்சிகள்”தமிழர்களின் கலாச்சார பாரம்பரியமான இயல், இசை, நாடக நிகழ்ச்சி தாராபுரத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் கலைப் பண்பாட்டு இயக்ககம் சார்பில் துவங்கியது. இந்நிகழ்ச்சியினை விழா ஒருங்கிணைப்பாளர் “கலைமாமணி”தாராபுரம் சி.கலா ராணி அவர்கள் வரவேற்புரை வழங்கி துவக்கி வைத்தார்.

தமிழர்களின் பாரம்பரிய இயல்,இசை,நாடக நிகழ்ச்சியை பற்றி மாண்புமிகு மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் திருமதி. கயல்விழி செல்வராஜ் அவர்களும், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டலம் தலைவர் திரு.இல.பத்மநாபன் அவர்களும், தாராபுரம் நகர மன்ற தலைவர் திரு. பாப்பு கண்ணன் அவர்களும், மற்றும் வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் திரு. தென்னரசு அவர்களும், தாராபுரம் நகரச் செயலாளர் திரு. முருகானந்தம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

விழாவின் துவக்க நிகழ்ச்சியாக மங்கள நிகழ்ச்சியோடு துவங்கியது. மற்றும் விழாவில் பறை இசை, துடும்பு இசை மற்றும் நாடக பாடல் நிகழ்ச்சிகள் அரங்கேறின.

தாராபுரம் நிருபர் : கோபி.
