Headlines

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்.பெற்றுக் கொண்டார்.

மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 585 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்புலெட்சுமி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நம்பிராயர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *