திருநெல்வேலி, நவ.1:-
பாளையங் கோட்டை வ. உ. சி. மைதானம் உள்விளையாட்டு அரங்கில் இன்று (நவம்பர்.12) காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியல், திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருகை தந்த, 2025-ஆண்டிற்கான 14-வது ஆடவர் ஹாக்கி, இளையோர் உலக கோப்பையினை, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா சுகுமார், நெல்லை மாநகராட்சி துணை மேயர் ஆகியோர் முன்னிலையில், விளையாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் புடைசூழ வரவேற்று, காட்சி படுத்தினர். 2025- ஆம் ஆண்டுக்கான, 21- வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் FIH ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது.

இப்போட்டியானது 14-வது ஹாக்கி ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பைக்கானது ஆகும். ஹாக்கி விளையாட்டில் முன்னணி வகிக்கின்ற இந்தியா, அர்ஜென்டிணா, சீனா, நியூசிலாந்து,பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளிட்ட 24 நாடுகள் பங்கேற்கும் ஆண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள், இம்மாதம் (நவம்பர்) 28-ஆம் தேதி முதல், அடுத்த மாதம் ( டிசம்பர்) 10- ஆம் தேதி முடிய, மொத்தம் 13- நாட்கள் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள சென்னை மற்றும் மதுரை ஆகிய, இரு பெரு நகரங்களில் நடைபெறுகின்றன.
போட்டியின் சாராம்சங்கள்:- * முதன்முறையாக 24 அணிகள் பங்கேற்கின்றன.* ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில், இந்தியா 2001 மற்றும் 2016- ஆகிய ஆண்டுகளில் தங்கப் பதக்கங்களையும், அதற்கு முன்னதாக 1997- ஆம் ஆண்டு வெள்ளிப் பதக்கத்தையும், வென்றுள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான உலக கோப்பையை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், அறிமுகம் செய்வதற்கான வாகனக்குழு பயணத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இம்மாதம் (நவம்பர்) 10-ஆம் தேதி, சென்னையில் “கொடி” அசைத்து, துவக்கி வைத்தார்.
அதன் ஒருபகுதியாக இன்று (நவமம்பர். 12) பாளையங்கோட்டை வ.உ.சி. திடலில், உலக கோப்பையினை அறிமுகம் செய்து, போட்டியின் சின்னமான “காங்கேயன்” சின்னத்தை, “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா. சுகுமார் தலைமையில், “சபாநாயகர்” மு. அப்பாவு, காட்சிப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து, நெல்லை புறநகர் மாவட்டம் அம்பாசமுத்திரம் “வேல்ஸ் வித்யாலயா” பள்ளியிலும், இது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பாளையங்கோட்டை நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை முதுநிலை மண்டல மேலாளர் சிவா, மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி, “அர்ஜூனா” விருது பெற்ற கபடி வீரர் “மணத்தி” கணேசன்,சர்வதேச கைப்பந்து வீரர் சிவராஜன், சர்வதேச தடகள வீரர் ரோசிட்டோ சாக்ஸ், சர்வதேச தடகள வீராங்கனை எட்வினா ஜெய்சன் உட்பட பலர், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்’ ஹஸன்.
