மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், கழக தலைவர் தளபதியார் அவர்கள் நமது மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதையொட்டி மாண்புமிகு பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA வரவேற்பு பணிகள் குறித்து ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் நேரில் சென்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், மாவட்ட அவைத்தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், மாவட்ட து.செயலாளர் ஆ.சம்பத்குமார்,
நகர செயலாளர்கள் எம்.ஆர்.ஆறுமுகம், ம.அன்பழகன், ஷபீர்அகமத், மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் க.இராமமூர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் எம்.சிங்காரவேலன், மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் செந்தில்குமார் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.
