செப் 6 கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் கடல் பகுதியில் இன்று ஒருவரின் சடலம் கடலில் மிதப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடலோர காவல் குழும போலீசார் படகில் சென்று உடலை கரைக்கு கொண்டு வந்தனர்.
இறந்தவர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பெர்க்மான்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
