திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிம வளம் எடுக்கப்படுவதாகவும், அனுமதியின்றி சில குவாரிகள் இயங்கி வருவதாகவும் தமிழர் தேசம் கட்சியினர் தொடர்ந்து புகார் மற்றும் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் நத்தம் பகுதியில் உள்ள கல்குவாரிகளில் திண்டுக்கல் கனிமவள உதவி இயக்குநர் செல்வசேகர் ஆய்வு மேற்கொண்டார். நத்தம் வட்டாட்சியர் பாண்டியராஜ், வருவாய் ஆய்வாளர்கள் தவமணி, துர்கா தேவி, வெள்ளையம்மாள், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவக்குமார், தங்கவேலு உள்ளிட்ட பலர் ஆய்வின் போது உடனிருந்தனர்.
செய்தியாளர் : சின்னத்தம்பி
