கூச்சலிட்டதால் முகம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்கி விட்டு மர்ம நபர் தப்பி ஓட்டம்.

வாணியம்பாடி, ஆக.5- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜாய்சி. இவரது மகன் மற்றும் மகள் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜாய்சி நேற்று காலை வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மருமநபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து மருத்துவர் இல்லையா சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த ஜாய்சி மருத்துவர் யாரும் இல்லை என்று கூறிவிட மீண்டும் மாலையில் அதே நபர் மாஸ் மற்றும் தலையில் தொப்பி அணிந்து வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். அப்போது ஜெய்சி கதவை திறந்து மருத்துவர் இல்லை என கூறியுள்ளார்.
இருப்பினும் அந்த நபர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஜாய்சியை உள்ளே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்ற போது ஜாய்சி கத்தி கூச்சிலிடவே சத்தம் போடுகிறாயா என அவரது கழுத்தை நெரித்துள்ளார்.
சத்தம் கேட்டு வீட்டின் மேல் தளத்தில் குடியிருக்கும் நபர் ஓடி வந்து பார்த்த போது ஜாய்ஸியின் கழுத்தை மர்ம நபர் ஒருவர் நெறித்துக் கொண்டிருப்பதை கண்டு கூச்சலிட்டு உள்ளார்.
உடனடியாக சுதாரித்த மர்ம நபர் வீட்டில் இருந்து அவசர அவசரமாக வீட்டிற்க்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வேகவேகமாக சென்றுள்ளார்.
மர்ம நபர் வீட்டை வீட்டு வெளியில் செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. புகாரியின் பேரில் நகர போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்கள் நிறைந்த பகுதியில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து நகை பணம் பறிக்கும் சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
