மகாளய அமாவாசை – குவியும் பக்தர்கள் :
மகாளய அமாவாசையையொட்டி ராமேஸ்வர அக்னி தீர்த்த கடற்கரையில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இதனைத் தொடர்ந்து மதுரையில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெயில் காளியம்மன் கோவிலில் வியாபாரிகள் சார்பில் ஜெயில் காளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
மகாலயா அமாவாசையை முன்னிட்டு அப்பகுதிகளின் வியாபாரிகளின் சார்பில் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் 1000 பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி.
