திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரத்தில், “ஊராட்சி மன்றம்” மற்றும் “நம்மால் முடியும்!” குழுவினர் இணைந்து மேற்கொண்ட, குளக்கரைகளில் 5 ஆயிரம் பனை விதைகள் ஊன்றும் பணி, இரண்டாவது ஆண்டாக, நடைபெற்றது. பண்டாரபெருங்குளம் கரை மற்றும் கால்வாய் கரை பகுதிகளில் நடைபெற்ற இந்த பணியை, பண்டாரபெருங்குளம் குளத்தின் தலைவர் முத்துகுமார் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். “நம்மால் முடியும்” குழு தலைவர் வழக்கறிஞர் “ராதை” காமராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக, ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் , வருவாய் ஆய்வாளர் நடராஜன் , வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜா , கிராம நிர்வாக அலுவலர் ஜவான் , செஞ்சட்டி அணைக்கட்டு விவசாய சங்க தலைவர் ஐயப்பன் , நித்தியகல்யாணிவெள்ளையன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார் , ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகுமார் , ராதாபுரம் வட்டார விவசாயிகள் சங்க தலைவர் சுந்தரம் , ஆகியோர் பங்கேற்றிருந்தனர். கொண்டு பனைவிதை நடவு பணிகளை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ராதாபுரம் கிராம உதவியாளர் முத்துராஜ் , காவலர் ரமேஷ் , ஆசிரியர்கள் கிங்ஸ்டன், சால்டர் , வள்ளியூர் பசுமை இயக்க தலைவர் பசுமை நாயகன் சித்திரை , பிளட் டொனேட்டர் சிதம்பரகுமார் , வாசகர் வட்ட தலைவர் மணி , காவலர் ரமேஷ் , வள்ளியூர் பசுமை இயக்க செயலாளர் சண்முகம் , சிவசுப்பிரமணியன் , பொன்கலம் , ஆண்டி , ரோஸ்மியாபுரம் ஸ்ரீ நதி ரோஸ் பசுமை இயக்க தலைவர் பிரபாகரன் , நம்மால் முடியும் குழு லட்சுமணன் , லாரா ரமேஷ் , குமாரி ,வழக்கறிஞர் மணி , சங்கர் மற்றும் நி.வெ.செஅரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.