உடுமலை, நவம்பர் : 27.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்(தேர்தல்) துறை தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 2023 ன் படி மடத்துக்குளம்,கணியூர் பேரூராட்சிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

நிகழ்வுகளில் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.மடத்துக்குளம் பேரூராட்சி நியமன உறுப்பினராக மகாலட்சுமி பதவியேற்றுக் கொண்டார்.பேரூராட்சித் தலைவர் கலைவாணி பாலமுரளி,செயல் அலுவலர் ஆகியோர் நியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இதுபோல கணியூர் பேரூராட்சியில் நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கலாவதிக்கு பேரூராட்சித் தலைவர் செந்தமிழ்ச் செல்வி,துணைத் தலைவர் ஜெய்னுலாபுதீன்,செயல் அலுவலர் ஹரிதாஸ் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
