செப் 19 கன்னியாகுமரி
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவை முன்னிட்டு, மன்னர்களின் கால பாரம்பரிய மரபுப்படி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலிலிருந்து அம்மன் விக்ரகம், தமிழக – கேரள இரு மாநில போலீசாரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டது.
முத்துக்குடைகளும் பாரம்பரிய இசைக்குழுக்களும் ஒலித்திட, ஏராளமான பக்தர்கள் வழியனுப்பி வணங்கினர். வருடந்தோறும் நடைபெறும் இவ்விழா, தமிழகம் – கேரளத்தை இணைக்கும் கலாசாரச் சங்கமமாகக் கருதப்படுகிறது.
அம்மன் விக்ரகம் ஊர்வலமாகச் சென்று திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் சிறப்பாக வைக்கப்பட்டு, பாரம்பரிய வழிபாடுகள் நடைபெற்றிடவுள்ளது.
குமரி மாவட்ட செய்தியாளர் – பாவலர் ரியாஸ்.
