Headlines

உடுமலை பகுதியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பொரி விற்பனை தீவிரம்மானியதிட்டங்கள் வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை..!

உடுமலை பகுதியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பொரி விற்பனை தீவிரம் மானியதிட்டங்கள் வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை..!

செப் 27, உடுமலை-

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஏரிப்பாளையம் கொமரலிங்கம், கொழுமம் ,பாப்பன்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நெருங்குவதால், பொரி உற்பத்தி மற்றும் விற்பனை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

பொறி தயாரிக்க பயன்படும் அரிசி, கல்கத்தா மற்றும் கர்நாடகவில் இருந்து டன் கணக்கில் கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்தாண்டு ஓரு கிலோ அரிசி கிலோ 55 ரூபாய் க்கு விற்று வந்த நிலையில் தற்போது பல்வேறு காரணங்களால் ரூ.75 ரூபாய் விற்பனை ஆகி வருகிறது.

இதற்கிடையில் இந்த அரிசியை நீரில் ஊற வைத்து, சூரிய ஒளியில், உலர வைத்து, சிறு குவியல்களாக குவித்து வைக்கப்படுகிறது.

பின்பு அதில் உப்பு, சர்க்கரை, சமையல் சோடா மற்றும் ஆற்று மணல் ஆகியவை தேவைக்கு தகுந்த அளவில் சேர்த்து, சில மணி நேர பக்குவம் செய்யப்படுகிறது.

பின்பு, இந்த அரிசியை பொரி உற்பத்தி செய்யும் இயந்திரத்தில் (பொரிஅடுப்பு) கொட்டி, இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வேக வைக்கும் பொழுது, சுவைமிகுந்த பொரி உற்பத்தியாகிறது.

ஆயுத பூஜை விரைவில் கொண்டாடபடும் நிலையில கோவை மதுரை திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொறியை மூட்டைகளில் சேகரித்து விற்பனைக்கு அனுப்பும் பணி தற்போது தீவிரமாக நடைப்பெற்று உள்ளது

பொரி உற்பத்தியாளர்கள் பூங்கொடி செந்தில்குமார் கூறியதாவது:.. பொரியை படி மற்றும் பக்கா அளவில் கொடுக்கிறோம்.

55 பக்கா எடையுள்ள மூட்டை தற்சமயம் மூலப்பொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூபாய் 570 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.

தற்பொழுது கேரளா கோவை திருப்பூர் பொள்ளாச்சி திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மொத்த வியாபாரிகள் தற்பொழுது பொறியை வாங்கி சென்று வருகின்றனர்.

மேலும் அயல்நாட்டு தின்பண்டங்கள் அதிகமாக தற்பொழுது விற்பனை ஆவதால் பொறி விற்பனை குறைந்து உள்ளது எனவும் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் குடும்பங்களுக்கு மேல் பொறி உற்பத்தி செய்துவந்த நிலையில் காலப்போக்கில் இத் தொழில் நலிவடைந்து தற்சமயம் பல்வேறு மாற்று தொழிலுக்கு சென்று விட்டார்கள்.

ஆகையால் நலிவு அடைந்து வரும் இத் தொழிலை மேம்படுத்தவும் பொறி உற்பத்தியை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு அடைய தமிழக அரசு பொறி உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள் வாங்க மானியதிட்டங்கள் மூலம் கடன் உதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *