மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துரை சார்பில் விழுப்புரம் இ.எஸ் கார்டன் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹமான்.இ.ஆ.ப அவர்கள் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்கள் முன்னிலையில் இன்று குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன்.இகாப அவர்கள் தீயணைப்புத்துறை விழுப்புரம் மண்டல துணை இயக்குனர் திரு. தென்னரசு திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் திரு.க. முரளி மாவட்ட தீயணைப்பு அலுவலகர் கள்.திரு. பாஸ்கரன். திருமதி அனுசியா கள்ளக்குறிச்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி.
